செலரியில் கலோரிகள் அறவே கிடையாது. அதிக அளவு தண்ணீர் கொண்டது. இதனால் கலோரிகள் உடலில் சேராது. அதிக அளவு நார்ச்சத்தும் இருப்பதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரக்கூடியது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.
உடலை டீடாக்ஸ் செய்வதால் டாக்ஸின்கள் வெளியேறுகிறது. சருமத்துக்கும், உடலுக்கும், முடிக்கும் பாதுகாப்பு தருகிறது. செலரியில் ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், பொட்டாசியம் இருப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.