மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன. மாதுளம் பூக்களும் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது.
மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.
மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும் அது மட்டுமல்லாது மாதவிலக்கு நிற்கும் காலமான மொனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டாகுவதுடன் கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி உண்டாகும் இவர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இப்பிரச்சனை நீங்குவதுடன் வெள்ளை படுதலும் குணமாகும்.