முசுமுசுக்கை கீரையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் C ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
முசுமுசுக்கை வாந்தியை கட்டுப்படுத்தும். சளி, இருமல், இரைப்பை நோய்கள் குணமாகும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். முசுமுசுக்கையானது நுரையீரல், சுவாசக் கோளாறு, சுவாசப்பையில் உண்டாகும் கபத்தை அகற்றும்.
முசுமுசுக்கை இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இப்படி செய்தால் இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். இரத்தமும் சுத்தமடையும்.