டிராகன் ஃப்ரூட் தெரியுமா? விதை முதல் இலை வரை அனைத்தும் நன்மைகளே...

சனி, 24 ஆகஸ்ட் 2019 (11:42 IST)
டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்ட ஒரு பழம். இதன் நன்மைகளை விவரமாக தெரிந்துக்கொள்ளுங்கள்.. 
 
மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் இந்த பழம் அதிக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
 
டிராகன் பழத்தில் 3 வகை உள்ளன. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம். சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.
 
உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொழுப்பு குறைப்பு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும். 
இந்த பழத்தில் இருக்கும்விதைகள் செரிமானத்திற்கு நல்லது. ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிப்பதில் இந்த பழத்தை பயன்படுத்துவர். 
 
இந்த பழத்தின் இலைகளை கொண்டு ஆரோக்கியமான டீயை தயாரிக்கலாம். இதன் தோலில் ஊட்டச்சத்துகள் குறைவு. 
 
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமான பகுதி சிறந்த செயலாற்றலுடன் இருக்கிறது. 
 
குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்