பப்பாளி பழம் ஜீரண சக்தியை அதிகரித்து அஜீரணத்தை குணமாக்கும் தன்மையை கொண்டது. பப்பாளி காயின் சிறிய நறுக்கிய துண்டின் உட்பகுதியை முகப்பரு உள்ளவர்கள் முகத்தில் மென்மையாக. தேய்த்து வந்தால் முகப்பரு சரியாவதுடன் முகப்பொலிவை கூட்டி முகத்தில் அழகு தரும். அதுமட்டும் அல்லாமல் நீரழிவு நோய் உள்ளவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் பப்பாளி பழத்தையும், நாவற்பழத்தையும் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் சரியாகிவிடும் .
பப்பாளி பழத்தில் நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, பி, எ, கால்சியம் இதுபோன்ற பலவிதமான சத்துக்கள் பப்பாளி பழத்தில் உள்ளதால் இதய நோய் போன்ற பலவிதமான நோய்களையும் குணமாக்கும்.
பப்பாளி பழம் தாய்ப்பால் சுரக்கும் ஆற்றல் கொண்டது . மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகிவிடும். கர்ப்பகாலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது கருக்கலைப்பை எற்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது. செரிமான மாத்திரைகள் இந்த பப்பாளி பழத்தில் இருந்து தான் தயாரிக்க பயன்படுகிறது .
பப்பாளி பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பப்பாளி பழத்தின் கனிந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதை தடை செய்யலாம். பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் கண்களில் எற்படும் பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. இந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் சருமத்தில் எற்படும் சுருக்கங்களை தவிர்க்கலாம்.