வெங்காயத்தாளனது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என பலவாறு அழைக்கப்படுகிறது. இது சாம்பார் வெங்காயம், பல்லாரி, பூண்டு ஆகியவற்றின் குடும்பத்தை சேர்ந்த கீரையாகும்.
வெங்காய தாளின் மேற்பகுதியானது பச்சையாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும். வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.