கெட்ட கொழுப்பை நீக்கும் ஆற்றல் கொண்ட சிலவகை உணவுகள் !!

திங்கள், 9 மே 2022 (13:48 IST)
கத்திரிக்காயில் கலோரி அளவு மிக மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. மேலும் இதில் நார்ச்சத்தும் உள்ளது. இந்தக் காரணத்தினாலேயே கத்திரிக்காய் உடலில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவுகின்றது.


காரமாகச் சாப்பிட்டால் கொழுப்பு கரையும் என்பார்கள். அது மிகவும் உண்மையான தகவல்தான். மிளகாயில் அல்லியம் என்னும் வேதிப்பொருள் காணப்படுகின்றது. இது கெட்ட கொழுப்பை நீக்கப் பெரிதும் உதவுகிறது.

அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இந்த இரண்டு சத்துக்களும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டன. அதிக அளவு கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், அவகேடோ பழங்களைச் சாப்பிடுவது உகந்தது. இதன் மூலம் அவர்களின் இதயம் வலிமை அடையும்.

ஓட்ஸில் பீட்டா குளுக்கான் என்னும் ஒருவகை கரையும் நார்ச்சத்து காணப்படுகின்றது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பீட்டா குளுக்கான் சத்து பார்லியிலும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சோயா பொருட்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன. ஆக இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கலாம். இந்த வகை உணவு இதயத்தின் செயல்பாட்டைச் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

ஆலிவ் எண்ணெய்யில் மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் காணப்படுகின்றன. இதில் மேலும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைவான அளவு உள்ளது. இவை அனைத்தும் கெட்ட கொழுப்பை நீக்கும் ஆற்றல் கொண்டவை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்