சருமத்தை மிக மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும் அழகு குறிப்புகள் !!

புதன், 22 ஜூன் 2022 (16:46 IST)
வேப்பிலையை அரைத்து உடல் முழுவதும் பூசி சரியாக 15 நிமிடம் ஊறவைத்த பிறகு நன்றாக தேய்த்து குளித்து பாருங்கள். அதன் பின் சோப் போடக் கூடாது. நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். சருமத் தோல் நிறமேறும். மிக மென்மையாக மாறும்.


தினமும் முடியாவிட்டாலும் வாரம் 3 நாட்கள் உபயோகியுங்கள். அற்புதமான மூலிகை மருந்து இது. குறிப்பாக வெயில் காலத்தில் பயன்படுத்தலாம்.

வறண்ட சரும பெற்றவர்கள் ரோஸ் வாட்டரில் சிறிது தேன் கலந்து முகம் கழுத்தில் தேயுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தின் ஆழமாக உள்ள அழுக்கு, இறந்த செல்கள் வெளிவந்துவிடும். ஈரப்பதமும் அளிக்கும். மற்ற அழகு சாதனங்கள் போல் முகத்தில் வறட்சியை ஏற்படுத்தாது.

 எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்கள் அடிக்கடி முகத்தை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். வறண்ட சருமம் உடையவர்கள் பழங்களை முகத்தில் தடவி உலர விட்டு கழுவினால் மிருதுவாகும்.

பயத்தம் மாவு அரைத்து வைத்துக் கொண்டு அதனை முகம் மற்றும் உடல் முழுக்க தேய்த்து சோப்பிற்கு பதிலாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

சருமம் தொய்வாக, வறண்டுபோய்க் காட்சியளிக்கிறது என்றால், அதற்கு வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். காலை, மாலை வேளைகளில் அடிக்கும் இளம் வெயிலில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. நாம் உண்ணும் உணவில் கிடைப்பதைவிட சூரிய ஒளியில்தான் அதிக அளவில் வைட்டமின் டி கிடைக்கும்.

நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரையாவது கட்டாயம் குடிக்க வேண்டும். நீர்த்தன்மை அதிகமுள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, ஆரஞ்சு, திராட்சை போன்ற காய் மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும்.

காலை எழுந்தவுடன் பன்னீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும். இதனால், சருமத்தில் உள்ள அடைப்புகள் நீங்கி, நாள் முழுவதும் முகம் புத்துணர்வோடு இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்