சொடக்கு தக்காளி வலி நிவாரணியாகவும், கட்டிகளை போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது. அதைவிட முக்கியம் புற்றுநோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.
உடல்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் குணமாக: தேவையான பொருட்கள்: சொடக்கு தக்காளி செடியின் இலை, மஞ்சள் தூள். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, அதனுடன் நறுக்கிய இலையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அந்த நீரை வடிகட்டி, குடித்து வந்தால், உடல்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் குணமாகும்.
அதே போன்று புற்று நோய் இருப்பவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால், புற்று நோய் வளர்ச்சி தடுக்கப்படும். மேலும், சர்க்கரை நோய்க்கும் நல்ல பலனைத் தரும்.