சோம்பு தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா....?

சோம்பு உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும்  செய்கின்றது.

நீண்ட நாட்களாகப் பசியெடுக்காமல் அவதிப்படுபவர்களுக்குக் கூட, பசி உணர்வை சோம்புத் தூண்டுகின்றது. கடினமான உணவு வகைகளையும் அலட்டல்  இல்லாமல் செரிக்கவைக்கும் குணம் இதற்கு உண்டு.
 
சோம்பை சிறிதளவு எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெந்நீர் பருகி வந்தால், ஜலதோஷம் பிரச்சினை உடனே சரியாகிவிடும்.
 
சோம்பு தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சோம்பு தண்ணீர் குடித்தால் வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரைந்து, தொப்பை குறைந்து சரியான உடல் அமைப்பை தரும்.
 
உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் குடித்தாலே போதும். ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாமெலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
 
செரிமானமின்மையால் ஏற்படுகின்ற வயிற்றுவலிக்குச் சோம்புதண்ணீர் உடனடி தீர்வு தரும். தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை  குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
 
மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், வயிற்றுவலி நீங்கும்.
 
நாம் அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றங்கள் நீங்கி, பற்களை  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த பெருஞ்சீரகம் உதவுகிறது.
 
கருப்பை சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், இருமல், மந்தம், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிற்கு சோம்பு சிறந்த தீர்வைத் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்