அனைத்து வகையான சத்துக்களையும் கொண்டுள்ள சீத்தாப்பழம் !!

வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:02 IST)
சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய இரண்டும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகின்றது.


சீத்தாப்பழத்தில் உள்ள குளுக்கோஸ், சுக்ரோஸ் ஆகிய இரண்டும் அதிக அளவில் இருப்பதன் காரணமாக உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்குகிறது.

உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்ய ஊக்குவிக்கின்றது. ரத்த அழுத்தமானது சீராக்கி இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

சீத்தாப்பழம் உடலுக்கு நன்கு வலிமையை தரக்கூடியது. இதில் கால்சியம் நிறைந்திருக்கும் காரணத்தினால் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும்.


சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் கிடைக்கின்றன.

சீத்தாப்பழத்தை உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் உள்ள இருபாலரும் தாராளமாக சாப்பிடலாம். சீத்தாப்பழம் அனைத்து வகையான சத்துக்களையும் கொண்டு இருக்கின்றது அதாவது வைட்டமின்கள் புரதம் கொழுப்புச்சத்து நார்ச்சத்துக்கள் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்