அஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்ற இரைப்பைக் கோளாறுகளை குணப்படுத்த சாத்துக்குடி உதவுகிறது.
தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், இதயம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கும். குறிப்பாக சாத்துக்குடியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
சாத்துக்குடி ஜூஸ் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. சாத்துக்குடி ஜூஸ், குடலின் இயக்கத்தை அதிகரித்து, நாள்பட்ட மலச்சிக்கலை சரிசெய்யும்.