அடிக்கடி உணவில் பசலைக்கீரையை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !!

புதன், 20 ஜூலை 2022 (18:22 IST)
பசலைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் பல வகையான நோய்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளலாம்.


பசலைக்கீரை சாப்பிடுவதால் நீர் அடைப்பு, வெள்ளை ஒழுக்கு, மூத்திரக் கடுப்பு போன்றவை நீங்கும்.

பசலைக்கீரை பயன்கள் அதில் உள்ள ஏராளமான ஆரோக்கிய நன்மைகளில் அடங்கியுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து இதயத்திற்கு உதவுவது வரை என பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.     

மலச்சிக்கல், தொப்பை பிரச்சனை போன்றவற்றிற்கு இந்த கீரை நல்ல நிவாரணியாக காணப்படுகிறது.

பசலைக் கீரையில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப் படுகிறது. சோடியத்தின் அளவை கட்டுப் படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

கால், கை, மூட்டுக்களில் வரக்கூடிய வாதத்தையும் போக்கக் கூடிய தன்மை இந்த பசலைக் கீரைக்கு உள்ளது.

வெள்ளை பசலைக் கீரையை நம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் மூத்திரத்தை அதிகரித்து உடல் சூட்டை குறைக்கின்றது.

இந்தக் கீரையை நாம் அதிக அளவில் உணவில் பயன்படுத்துவதால், ஆசன வாயில் ஏற்படக்கூடிய புண், கடுப்பு, எரிச்சல் போன்றவையும் மிக விரைவில் குணமாகின்றது.

பாசிப்பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் வெள்ளை வெட்டை நோய்கள் சரியாகும். கர்ப்பிணிப் பெண்கள் இந்தக் கொடிப் பசலையை சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்