யாரெல்லாம் சந்தனத்தை தொடவே கூடாது?

வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (15:24 IST)
மருத்துவ குணம் நிறைந்த சந்தனம் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலர் இதை பயன்படுத்துதால் பிரச்சினைகள் வரலாம்.


நல்ல வாசம் நிறைந்ததும், மருத்துவ குணம் கொண்டதுமான சந்தனம் சிவப்பு, மஞ்சள் சந்தனம் மற்றும் வெள்ளை சந்தனம் என மூன்று வகையாக கிடைக்கிறது.

20 கிராம் சந்தனபொடியை 300 மி.லி நீருடன் காய்ச்சி மூன்று வேளைக்கு 50 மி.லி குடித்து வந்தால் நீர்க்கோவை, மந்தம், இதய படபடப்பு குறையும்.

சந்தனத்தை அரைத்து எலுமிச்சை சாறுடன் கலந்து இரவில் உறங்கும் முன் கண்களில் தடவி வந்தால் கண் கட்டிகள் மறையும்.

சிவப்பு சந்தனத்தை அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவதால் தலைவலி குறைவதுடன், உடல் குளிர்ச்சி அடையும்.

சந்தன விழுதுடன் நெல்லிக்காய் சாறு கலந்து 40 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மதுமேகம் நீங்கும்.

கோடை கால கொப்புளங்கள், வேர்க்குறு மீது சந்தன கட்டைகளை அரைத்து தடவினால் குணமாகும்.

தயிருடன் சந்தனப் பொடியை சேர்த்து முகத்திற்கு தடவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

சந்தனத்தை கர்ப்பிணி, பாலூட்டும் பெண்கள், 1 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தக்கூடாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்