தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைக்கு தீர்வு தரும் சாமந்திப்பூ !!

சாமந்திப் பூ முறையற்ற உடல் உஷ்ணத்தைப் போக்கி பலத்தைத் தருகிறது. சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து வெந்நீரில் போட்டு மூடி, 15 நிமிடம் கழித்து  வடிகட்டுங்கள். இதை தினமும் 2 டீஸ்பூன் குடித்துவர, மலச்சிக்கல் குணமாகும்.

சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும். உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம்.  இத்தகைய உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும். 
 
சிலருக்கு எவ்வளவுதான் உணவருந்தினாலும் உடல் எடை கூடாமல் மெலிந்தே இருப்பார்கள். எப்போதும் சோர்வாக தோன்றுவார்கள். இவர்கள் சாமந்திப் பூவின்  இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது. 
 
அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் 2 துளி உள்ளுக்கு சாப்பிட்டு வர, அல்சர் குணமாகும். ஒரு சில வகை கேன்சர் நோய்க்கும் இது மருந்தாக பயன்படுகிறது. காதடைப்பு  இருந்தால், காதில் ஒரு துளி விட்டுக்கொண்டால் போதும். உடனடியாக சரியாகிவிடும். 
 
சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து தண்ணீரில் ஊறவையுங்கள். 5 முறை தண்ணீரை மாற்றிக் கொண்டே இருங்கள். பிறகு வடித்து, பூக்களை மட்டும்  அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை, சீயக்காயுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளியுங்கள். தலை அரிப்பு, பொடுகு, முடி கொட்டுவது போன்ற பிரச்சனைக்கு  தீர்வு கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்