ஒற்றை தலைவலி, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நன்னாரி நல்ல மருந்தாகும்.
நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும்.
நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
நன்னாரி வேரை நன்கு சுத்தம் செய்து அரைத்து, பசும்பாலில் அரைத்து, மூன்று தடவை பாலில் கரைத்து வடிகட்டி, தினமும் 3 வேளை 5 நாட்கள் உண்டு வந்தால் உதிரப்போக்கு தீரும்.