பித்தத்தை தணித்து உடல் நிலையை சீராக்க உதவும் மருதாணி !!

மருதாணி வைப்பதால் நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அளிக்கிறது. மருதாணி வைப்பதால் சொறி மற்றும் சிரங்கு போன்ற தொற்றுக்கள் பரவாமல் தடுக்கலாம்.

கையில் மருதாணி வைப்பதால் உடலில் உள்ள வெப்பத்தை தனித்து உடல் சூட்டடை தணிக்கிறது. மருதாணியை நாம் கால்களில் ஏற்படும் வெடிப்புகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பும் மறையும்.
 
நாம் தூக்கம் வராமல் நிறைய மருந்துகளை தேடி செல்கிறோம்; ஆனால், தூக்கத்திற்கு சிறந்த மருந்தாகும். தீக்கொபுலங்கள் ஏற்பட்டால் அதற்கு நாம் மருதாணியை பூசிவந்தால் உடனடியாக குணமடையுமாம். 
 
மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும்.
 
மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்.
 
மருதாணி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெய்யில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால்  இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.
 
மருதாணியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை  சீராக்க உதவும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்