நாம் தேர்ந்தெடுக்கும் ஷாம்பு, ரசாயனம் கலந்த ஷாம்பு, கூந்தல் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் நன்மை தராது. எனவே ரசாயனம் இல்லாத இயற்கையான முறையில் உள்ள சீக்காய், கற்றாழை, செம்பருத்தி, வெந்தயன் இவற்றை உபயோகிக்க முயற்சி செய்வது எவ்வித பக்க விளைவுகள் இல்லாமல் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
மலசிக்கல், அஜீரணம் போன்றவை ஏற்படாமல் உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள வேண்டும். ஈர தலையில் எண்ணெய் தேய்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.