4. மூல நோய், மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்த வல்லது.
5. இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றன. பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
6. அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.
7. பொன்னாங்கண்ணி கீரை வாய் துர்நாற்றத்தை போக்கும்.
8. இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு கொடுக்கும் வல்லமையும் பெற்றுள்ளது இந்த பொன்னாங்கண்ணி கீரை.