கொழுப்பை குறைப்பதில் ”பிஸ்தா” பிஸ்தாதான்!!

Arun Prasath

ஞாயிறு, 17 நவம்பர் 2019 (11:40 IST)
நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு பிஸ்தா மிகவும் உதவுகிறது.

பிஸ்தாவை அன்றாட உணவுகளில் நாம் சேர்த்து வந்தால் நமது ஆரோக்கியம் வளம்பெறும். குறிப்பாக பிஸ்தா கொட்டையில் அதிக புரதச்சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது.

பிஸ்தாவில் கலோரிகள் அதிகமாக உள்ளது. ஆனால் கார்போஹைட்ரேட் சிறிதளவே உள்ளது. இதில் புரதம் அதிகமாக காணப்படுகிறது. பிஸ்தாவை நாம் தினமும் அளவோடு எடுத்துக்கொள்ளவேண்டும்.

அவ்வாறு நாம் எடுத்துக்கொண்டால், என்னென்ன நன்மைகள் ஏற்படும்?

1.புற்றுநோயை தடுக்கும்
2.கண் பார்வை மங்கலை தடுக்கும்
3.ரத்த குழாயை சீராக்கும்
4.கெட்ட கொழுப்புகளை குறைக்கும்
5.திசுக்கள் பாதிக்கப்படுவதிலிருந்து தடுக்கும்
6.உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும்
அன்றாடம் நாம் பிஸ்தாவை சிறிதளவேணும் எடுத்துகொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்