முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கருநிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை பனங்கற்கண்டு எனப்படும். இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
உளுந்துடன் பனைவெல்லம் சேர்த்து உளுந்துக்களி செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
பனை வெல்லம் அல்லது கருப்பட்டி சர்க்கரைக்கு சரியான மாற்று மட்டுமல்ல, அது நிறைய ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
பனை வெல்லத்தில் இரும்பு இருப்பதனால் ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரம் இரத்த சோகைக்கு சிறந்த மருந்தாகும்.
குழந்தை முதல் பெரியவர்கள் அனைவரும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும்.