ப்ரோக்கோலியில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!

ப்ரோக்கோலியில் வைட்டமின் சி உள்ளது, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி சரும நலனுக்கும் துணை புரிகிறது. ப்ரோக்கோலியில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை இயற்கையாகவே அழிக்கும்  சக்தியை பெற்றுள்ளது. 
 
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் குர்செடின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. 
 
ப்ரோக்கோலியில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும் இது மற்ற காய்கறிகளை  விட அதிக புரதத்தையும் கொண்டுள்ளது.
 
ப்ரோக்கோலி செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. இது வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும்  நுண்கிருமிகளின் பெருக்கத்தை அதிகரித்து, சாப்பிடும் உணவுகள் சுலபத்தில் செரிமானம் ஏற்பட உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்