கடலை மாவை வைத்து ஃபேஸ் பேக் செய்தால், கரும்புள்ளிகள், முகப்பரு, பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும். இப்போது அந்த ஃபேஸ் பேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
கடலை மாவுடன் கிரீம் பால் ஊற்றி நன்கு பேஸ்ட்டாக கலக்கி அதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன் பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு கழுவுங்கள். இந்த பேக் சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.