வேப்பிலையின் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இரத்தத்தை சுத்தப்படுத்தும், நச்சுகளை நீக்கும், பூச்சி கடியையும் அல்சர்களையும் குணப்படுத்தும். உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களால் உடல் பாதிப்படையாமல் காக்கும், புண்கள், தீக்காயங்கள் மற்றும் இன்ன பிற சரும பாதிப்புகளை குணப்படுத்தும்.
நச்சுக்களை நீக்குவதில் சிறப்பு பெற்றது அது. இதில் கசப்பு தன்மை அதிகம் உள்ளதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுறுசுறுப்பாக்கி நச்சுக்களை நீக்க செய்கிறது. வேப்பிலையை பொடி செய்து பசு நெய்யில் கலந்து சாப்பிடலாம். அல்லது வேறு வடிவிலும் எடுத்துக் கொண்டால் உடலில் இருந்து நச்சுக்களை நீக்கலாம்.
வேப்பிலை உங்களது சக்கரை அளவினை சீராக்குவதில் உதவும். இரத்தத்தில் உள்ள இன்சூலினின் பணிகளை சீராக்கி உடலுக்கு சரியான அளவு இன்சூலின் கிடைக்க செய்கிறது. எனவே, வேப்பிலையை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயுள்ளவர்கள் இன்சூலினை நம்பி இருப்பதை குறைக்கிறது. எனினும், மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்வது நல்லது.
வேப்பிலை இரைப்பைக் குடலில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்தும், அல்சர்களை சரி செய்யும், உப்புசம், வயிற்று பிடிப்பு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று இன்பெக்க்ஷனை தடுக்கிறது. செரிமானம் மற்றும் கழிவு பொருட்கள் வெளியேற்றத்தையும் சீராக்கும்.
வேப்பிலை வாய் ஆரோகியத்துக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களில் பயன்படுத்தப்படும். பேக்டீரியாவை எதிர்க்கும் தன்மை வேப்பிலையில் உள்ளதால் பற்களில் தோன்றும் நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவற்றை அது சரி செய்கிறது. வேப்பிலை நீரை மவுத்வாஷ் ஆக பயன்படுத்தலாம். வேப்பிலை குச்சிகளையும் டூத்பிரஷ் ஆக பயன்படுத்தலாம்.