உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்....!!

தினமும் காலையில் ஐந்து ஆவாரம் பூக்களை சுத்தம் செய்து சாப்பிட்டு வந்தாலும், ஆவாரம் பூக்களை காய வைத்து கிழங்குமாவுடன் சேர்த்து அரைத்து குளித்து வந்தாலும் உடவில் ஏற்படும் கற்றாழை நாற்றம் குறைந்து உடல் பொலிவு பெறும்.

வேப்பம் பூக்களை நிழலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் காலையில் 2 முதல் 5 கிராம் வரை வெந்நீரில் பருகி வர குடல்புழுக்களின் தொல்லைகள் நீங்கும். இதனை இரசமாகவும் வைத்து சாப்பிடலாம்.
 
முருங்கைப் பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து 200 மி.லி. பாலில் காய்ச்சி இரவில் பருகி வர வயிற்றில் உள்ள கிருமிகள் அழிவதோடு தேகபுஷ்டி உண்டாகும். ஆண்மைக்கு சிறந்த மருந்து.
 
கொள்ளுவை இரவில் ஊறவைத்து காலையில் அதே நீரில் வேகவைத்து சிறிது உப்பு மற்றும் மிளகுப்பொடி சேர்த்துப் பருகி வர நாளடைவில் உடல் பருமன்  குறையும்
 
செம்பருத்தி பூவை நீரில் இட்டு காய்ச்சி கசாயமாக இரவிலும், பகலிலும் உட்கொண்டு வந்தால் இருதயம் பலவீனம் மற்றும் அடிக்கடி ஏற்படும் இதய வலி  குணமாகும்.
 
வெண்தாமரையின் இதழ்களை கசாயமாகிப் பருகி வந்தால் இளநரை மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
 
கொள்ளுவை துவையலாகப் பயன்படுத்தி வந்தாலும் நாளடைவில் உடல் பருமன் குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்