நம் முன்னோர்கள் முக அழகிற்கும் சரும பாதுகாப்பிற்கும் வேப்பிலை, குங்குமப்பூ, மஞ்சள், சந்தனம், துளசி, தயிர், முல்தானி மட்டி, கடலை பருப்பு, தேன், நெல்லிக்காய் போன்ற பொருட்களை பயன்படுத்தி வந்தனர். இந்த பொருட்கள் முற்றிலும் சருமத்தை பாதுகாப்பதுடன், சருமத்தை போஷிக்கவும் செய்யும். இவ்வாறு வீட்டில் உள்ள மூலிகைகள் கொண்டு அழகை மேம்படுத்துவது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்
4. மேலும் ஒருசில பெண்களுக்கு முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றி முக அழகை கெடுக்கும். இவர்கள் குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து பூசி வந்தால் போதும், கரும்புள்ளி காணாமல் போய் விடும். மேலும் குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து அதனுடன் கொஞ்சம் சந்தன தூளை கலந்து குழைத்து முகத்தில் பூசினால் முகம் பளபளப்புடன் திகழும்.