பல்வேறு நோய்களுக்கு அற்புத தீர்வு தரும் முசுமுசுக்கை மூலிகை !!

செவ்வாய், 12 ஜூலை 2022 (15:05 IST)
முசுமுசுக்கையானது இளநரையை கட்டுபடுத்தும், காச நோயை குணபடுத்தும். முசுமுசுக்கையானது நுரையீரல், சுவாசக் கோளாறு, சுவாசப்பையில் உண்டாகும் கபத்தை அகற்றும்.


உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் முசுமுசுக்கையை எடுத்து கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

முசுமுசுக்கை வாந்தியை கட்டுப்படுத்தும். சளி, இருமல், இரைப்பை நோய்கள் குணமாகும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.

முசுமுசுக்கை இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இப்படி செய்தால் இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். இரத்தமும் சுத்தமடையும்.

முசுமுசுக்கை தைலம் உடல் சூட்டை தணிக்கும். கண் எரிச்சல் போக்கும். முசுமுசுக்கை கீரையுடன் வெந்தயம் சேர்த்து உண்டால் உடல் பலம் பெறும்.

முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து நெய்யில் வதக்கி, சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

முசுமுசுக்கை சாற்றில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி காலை மாலை இரு சிட்டிகை உண்டால் இருமல் குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்