ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக புதினா இருக்கிறது. இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் பற்றி பார்ப்போம்.
புதினா சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது. புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.
புதினாவில் இருந்து பெறப்படும் புதினா எண்ணெய் சிறந்து கிருமிநாசினியாக செயல்படுகிறது. புதினா இலைகளை அரைத்து அதிலிருந்து பெறப்படும் சாறுகளை, நமது சருமத்திற்கு தடவுவதால் தோலில் இருக்கும் புண்கள், அரிப்பு போன்றவை நீங்கும்.
புதினா இலைச்சாற்றை முகத்துக்குத் தடவி வந்தால், முகப்பரு தோன்றுவதை பெருமளவு குறைக்கிறது. முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளி தழும்புகள் மறைய உதவுகிறது.
கொசுக்கடி வண்டு மற்றும் பூச்சிக் கடிகளால் ஏற்பட்ட வீக்கம், எரிச்சல் போன்றவற்றுக்கு புதினா இலைச் சாறுகளைத் தடவுவதால் எரிச்சல் குறைந்து பூச்சிக்கடி விஷங்கள் உடலிலிருந்து நீங்குகிறது.
கொசுக்கடி வண்டு மற்றும் பூச்சிக் கடிகளால் ஏற்பட்ட வீக்கம், எரிச்சல் போன்றவற்றுக்கு புதினா இலைச் சாறுகளைத் தடவுவதால் எரிச்சல் குறைந்து பூச்சிக்கடி விஷங்கள் உடலில் இருந்து நீங்குகிறது.