எலுமிச்சை சாறை பயன்படுத்தி முகத்திற்கான மாஸ்க் எவ்வாறு செய்வது...?

ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (16:14 IST)
எலுமிச்சை சாறை பல வழிகளில் பயன்படுத்தி, சரும நிறத்தை பேணிக் காக்கலாம். சருமம் முழுவதும் சீரான நிறத்தை பெற, இயற்கை ப்ளீச் எலுமிச்சையை பல காலங்களாக பயன்படுத்தி வருகிறோம்


எலுமிச்சை, சரும நிரமிழப்பு, சரும சேதம் போன்றவற்றை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இந்த இயற்கை பொருளை பல விதங்களில் பயன்படுத்தி சரும நிறத்தை சீராக்கலாம். 

மாஸ்க் 1:
தேவையான பொருட்கள்: கற்றாழை ஜெல் 1 ஸ்பூன், முட்டை 1 (வெள்ளை கரு மட்டும்), மஞ்சள் தூள் 1 சிட்டிகை, எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்.

பயன்படுத்தும் முறை: மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஓன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை நன்றாக் கழுவி , சிறிது ஈரபதத்துடன் வைத்துக் கொள்ளவும். இப்போது முகத்தில் இந்த கலவையை தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். 

மாஸ்க் 2:
தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு 2 ஸ்பூன், ஆர்கனிக் தேன் 1 ஸ்பூன்.

பயன்படுத்தும் முறை: மேலே கூறிய இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு மாஸ்க் போல் செய்து கொள்ளவும். இந்த மாஸ்கை முகத்தில் எல்லா இடங்களிலும் படும்படி சீராக தடவவும். 15 நிமிடங்கள் நன்றாக காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

மாஸ்க் 3:
தேவையான பொருட்கள்: கடலை மாவு 1 ஸ்பூன், ஆரஞ்சு தோல் பவுடர் 1/2 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்.

பயன்படுத்தும் முறை: மேலே கூறிய எல்லா மூல பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் சமமாக தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். பின் மென்மையான ஸ்கின் டோனர் பயன்படுத்தவும். இது ஒரு சிறந்த பலனை தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்