இயற்கையான முறையில் சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் மருத்துவ குறிப்புகள்...!!

நமது உடலில் சிறுநீரகங்கள் முக்கிய பெரும் பங்கு ஆற்றுகின்றது. ரத்தத்திலுள்ள யூரியா போன்ற கழிவு பொருட்களை பிரித்தெடுத்து நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்றுகிறது. எனவே அதனை நல்ல முறையில் பராமரிப்பது அவசியம்.

தேவையான பொருட்கள்: எலுமிச்சை - 2 துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு, சீரகம் - 1 ஸ்பூன், எலுமிச்சை. எலுமிச்சை பாதி அளவு எடுத்துக்கொண்டு அதனை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவேண்டும். கொத்தமல்லியை தண்டுடன் சிறிதளவு எடுத்து கொள்ளலாம். சீரகம் 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
செய்முறை: மூன்றும் இந்த விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் 250 மில்லி அளவு நீரை எடுத்துக்கொண்டு அதில் இந்த 3 பொருட்களையும் சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக குறையும் அளவிற்கு கொதிக்க வைக்கவேண்டும்.
பின்பு வடிகட்டி நன்றாக ஆறவைத்து குடிக்கவேண்டும்.
 
குறிப்பு: இந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குடித்த பின்பு 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உண்ணவேண்டும்
 
உடல்சோர்வு, ரத்தம் சம்மந்தமான பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் குடிக்க வேண்டும். அதன்பின்பு மாதம் 1 முறை குடிப்பது உடல் நலத்திற்கு  நல்லது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், வாய்வு தொல்லை இருப்பவர்கள் வாரம் மூன்று நாட்கள் குடிக்கலாம். ஒரு சிறிய துண்டு இஞ்சியை அதனுடன்  சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பது நல்லது. தேவைப்பட்டால் குடிப்பதற்கு முன் 1 ஸ்பூன் தேனை சேர்த்துக்கொள்ளலாம்.
 
பயன்கள்: அஜீரண கோளாறை போக்கும். உடல் எடையை குறைக்கும். வாயு தொல்லையை போக்கும். சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்