எளிதாக கிடைக்கும் இந்த மூலிகையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

செவ்வாய், 5 ஜூலை 2022 (18:09 IST)
கீழாநெல்லி பல்வேறு நோய்கள் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கீழாநெல்லி மிகுந்த குளிர்ச்சி தன்மை கொண்டதாகும்.


கீழாநெல்லி இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்புச் சுவைகளைக் கொண்டது. கபத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும். இதனை பச்சையாகக் கூட சாப்பிடலாம்.

கீழாநெல்லி இலை சிறிது எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து மையாக அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை என இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலின் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.

நாள்பட்ட நீர் கடுப்பு நோயினால் அவதிப்படுபவர்கள் கீழா நெல்லி இலையுடன் கற்கண்டு சேர்த்து மைப் போல அரைத்து 1 வாரத்திற்கு இரண்டு வேளைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடனே சரியாகி விடும்.

கீழாநெல்லி, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு எடுத்து அரைத்து சிறிது மோரில் கலக்கி 45 நாள்கள் உட்கொண்டால் மாலைக்கண், பார்வை மங்கல் பிரச்சனை, வெள்ளெழுத்து பிரச்சனைகள் தீரும்.

கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் உடனே பல் கூச்சம் போய்விடும். மேலும் இலையை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி ஈறு நோய்கள் குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்