இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாய் கொப்பளித்து வருவதால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி ஒட்டுமொத்தமான வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும்.
அடிக்கடி எலுமிச்சை பழச்சாறு அருந்துபவர்கள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு, எலும்புகள் வலிமை பெற்று எலும்பு தேய்மானம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.