காசினி கீரையானது ஜீரண கோளாறு, பித்தப்பை, ரத்த சோகை, கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், இருதய நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், அதிக உதிரப்போக்கு இவற்றில் இருந்து நிவாரணம் பெற காசினிக் கீரையை உலர்த்தி பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டுவர வெள்ளைபடுதல் நோய் குணமாகும். காசினிக்கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.
காசினி கீரையில் இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சத்துகளான ஏ, பி, சி, போன்றவை நிறைந்து உள்ளது. அதிக உயிர்ச்சத்து கொண்ட காசினி கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.