முகம் அழகாகவும் வெள்ளையாக மாறுவதற்கு சில அழகு குறிப்புகள் !!

வியாழன், 23 டிசம்பர் 2021 (09:25 IST)
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால் முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாகவும் வெள்ளையாக மாறுவதை காணலாம்.

கசகசாவை பாலில் சேர்த்து 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். பின் அதை மிக்சியில் சேர்த்து மைய அரைத்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் அழகான தோற்றத்தை பெறுவதுடன் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சிடும்.
 
இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.
 
சிலரது முகம் எப்போதும் எண்ணெய் வடிந்தது போல் பொலிவு இல்லாமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.
 
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்