பல்வேறு அற்புத நன்மைகளை அள்ளித்தரும் பலாப்பழம் !!

பழந்தமிழர்கள் தெய்வீக பழங்களாக கருதிய முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை ஆகும். பலாப்பழத்தின் மேற்புறம் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும், கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். 

பலாப்பழத்தில் வைட்டமின் 'எ' சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.
 
இப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.
 
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்கவல்லது. அதாவது வயது முதிர்தலை தள்ளிப் போடுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது.
 
கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பலாப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது.
 
பலாப்பழ கொட்டைகளை பாலில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு அதை நன்கு அரைத்து,முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கங்கள் நீங்கும்.
 
பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது. “ஆஸ்டியோபொராஸிஸ்” எனப்படும் எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
 
பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்