மாதுளையை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் இதய பிரச்சனைகள் வருவதை தடுக்கமுடியுமா...?

வியாழன், 26 மே 2022 (17:53 IST)
மாதுளை பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தினமும் மாதுளை பழத்தை சாப்பிடலாம்.


மாதுளை பழம் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைப்பதால், இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயில் கொழுப்பு படிவதை தடுத்து இதய பாதிப்புகள் வராமல் பாதுகாக்கும். எனவே மாதுளையை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

மாதுளை பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் மாதுளையை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை அழித்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்து

மாதுளம் பழத்தை ஜூஸ் பிழிந்து அதனுடன் கற்கண்டுகளை சேர்த்து தினந்தோறும் காலையில் குடித்து வந்தால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சியையும் தடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்