அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப்போல் திரிந்துவிடுகிறதாம்.
நாம் வாங்கும் முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதில் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருந்தால், அந்த முட்டையை ப்ரிட்ஜில் வைக்க கூடாது.
ஒருவேளை நீங்கள் வாங்கிய முட்டையில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா இருந்து, அதனை ப்ரிட்ஜில் வைத்து பராமரித்தால், இதர முட்டைகளும் அந்த கொடிய பாக்டீரியாவால் தாக்கப்படும். எனவே இதனைத் தவிர்க்க வேண்டுமெனில், அறைவெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.
ஒருவேளை முட்டையைப்பயன்படுத்தி கேக் செய்ய வேண்டுமெனில் முட்டையை ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்க கூடாது. ஏனெனில் ப்ரிட்ஜில் வைக்கும் முட்டையினுள் உள்ள கருவானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருப்பதால், அதைக்கொண்டு கேக் செய்ய நினைத்தால், அந்த கேக் கடினமாக இருக்கும்.