பழங்களில் எண்ணற்ற நன்மைகளை கொண்ட மாதுளம்...!

பழங்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் குறிப்பக ஒரு சில பழங்களில் உள்ள நன்மைகள் அளவிட முடியாதவை. இவ்வாறு அளவிட முடியாத நன்மைகள் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளம் பழத்திற்கு என்று ஒரு தனி இடம் உள்ளது.
மாதுளம் பழத்தின் ஒவ்வொரும் பகுதியும் எண்ணற்ற நன்மைகளை நமக்குத் தருகின்றன. அவை சரும அழகைக் கூட்டக்கூடிய பழமாகவும், கூந்தல் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் பழமாகவுக் இந்த மாதுளைப் பழம் விளங்குகிறது.
 
மாதுளையானது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நிறைந்த அளவில் வழங்குகின்றன. உலர்ந்த சருமம், நிறம் மற்றும் சருமப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகவும் தோல் பராமரிப்பு பொருட்களில் மாதுளைப் பழத்தின் சாறு சேர்க்கப்பட்டுள்ளது.
 
மாதுளையின் விதைகள் காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவ பண்புகள் சிறந்த அளவில் பெற்றுள்ளன. மாதுளைபழச்சாறு கரும்புள்ளிகளைக்  கட்டுப்படுதுகிற மிகச் சிறந்த டோனர் ஆகச் செயல்படுகிறது.
 
மாதுளம் பழம் உடலில் உள்ள செரிமானப் பிரச்சினைகளைச் சரிசெய்து இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. வைட்டமின் சி, மாதுளைப்  பழத்தில் அதிக அளவில் உள்ளது.
 
சருமத்தின் ஆரோக்கியத்தைப் பரமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய வைட்டமின் ‘ஈ’ மாதுளைப் பழங்களில் அதிக  அளவில் காணப்படுகிறது.
 
மாதுளைப்பழம் வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘கே’ உள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கின்றன. வைட்டமின் ‘கே’ முடியின் வேர்க்கால்களை வலிமை அடையச் செய்கிறது. மேலும் வைட்டமின் ‘ஏ’ உச்சந்தலையினை அதிக முடியினைத் தயாரிப்பதற்காக  ஊக்குவிக்கிறது.
 
மூல வியாதி உடையவர்கள் தினமும் காலையில் மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்குத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பழச்சாற்றில் உப்பிற்குப் பதிலாகத் தேனும் சேர்த்து எடுத்துக்  கொள்ளலாம்.
 
மாதுளைப் பழங்களில் உள்ள அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையினைக் குணப்படுத்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்