உடல் எடை குறைப்பிற்கு உதவும் முக்கிய குறிப்புகள் !!

உடல் எடை குறையவும், அதிகரிக்காமல் இருக்கவும் உண்ணும் உணவில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துவது அவசியமோ அதே போல உடல் உழைப்பிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துவது என்பது முக்கியமானது.

தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு என நேரம் ஒதுக்க வேண்டும். அது ஜிம் போன்ற உடற்பயிற்சியோ அல்லது யோகா, நடைப்பயிற்சி,  ஓட்டப்பயிற்சி, ஜாக்கிங் போன்றவற்றை செய்ய வேண்டும். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது.
 
அதிக அளவிலான தண்ணீர் குடிக்கும் போது நம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். இதனால், உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகரிப்பதோடு நம் உடலுக்கும் அதிக நீர் கிடைத்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக இயங்க வைக்கும்.
 
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சையோ அல்லது சீரகமோ சேர்த்த் கொதிக்க வைத்து அருந்தலாம். அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம்.  இல்லையெனில் இரவு முழுக்க சீரகத்தையோ வெந்தயத்தையோ நீரில் ஊறவைத்து அந்த நீரை காலையில் குடிக்கலாம். இது நம் உடலில் உள்ள நச்சுகளை  வெளியேற்றி உடல் எடை குறைய உதவும்.
 
சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி இனிப்பு சாப்பிடுவதை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பில் மட்டுமல்லாமல் வேறு சில நோய்கள் வருவதையும் தவிர்க்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது நிச்சயம் உணவில் தான். எண்ணெய்யில் பொரித்த உணவுகள் ஃபாஸ்ட் ஃபுட்  எனப்படும் கலோரி அதிகம் உள்ள உணவு வகைகள், மசாலா உணவு வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிக அளவிலான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்