அதிமதுரத்தை எவ்வாறு பயன்படுத்துவதால் நன்மைகள் பெறலாம்...?

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

திராட்சை, அதிமதுரம் இவற்றின் கஷாயத்துடன் காய்ச்சிய பாலைப் பருகச் செய்தால், சிறுநீரத் தடையால் தோன்றிய வயிறு உப்புசம் நீங்கும்.
 
அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீரில் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி,  நுரையீரலை ஈரப்படுத்தும் தன்மை கொண்டது இந்த அதிமதுரப் பொடி.
 
அதிமதுரம், மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரம், உணவு செரிப்பதற்கு உதவுகிறது.
 
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களின் இயற்கை கோளாறுகள் நீங்கும்.
 
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க, இருமல் தணியும். அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு, 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.
 
அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில், ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் அழுத்தித் தேய்த்து, சிறிது நேரங்கழித்துக் குளிக்க, தலைமுடியின் குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டுப் போல பிரகாசிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்