பருக்களால் வந்த தழும்புகளைப் போக்கும் எளிய குறிப்புகள்...!

பருக்களை கிள்ளுவதால் ஏற்படும் தழும்புகளால் முக அழகையே கெடுத்துவிடும். இதனை தவிர்க்க பருக்களை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன.
3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 5 துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து,  முகத்தை வெதுவெதுப்பான நீரில் துடைத்து, இதனை தினமும் இரவில் படுக்கும் முன் பயன்படுத்தி வந்தால், பருக்கள் விரைவில் மறையும்.
 
சருமத்தில் உள்ள தழும்புகளை வைட்டமின் சி நிறைந்த பொருட்கள் எளிதில் மறையச் செய்யும். அதற்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை  அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, தினமும் இரவில் படுக்கும் முன் தண்ணீரில் கலந்து, முகத்தில் தடவி 15  நிமிடம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 1 டீஸ்பூன்  தேன் மற்றும் க்ரீன் டீ சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் மறையும்.
 
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முதலில் முகத்தை ஈரமான துணியால் துடைத்துவிட்டு, பின் இக்கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் உலர வைத்து, பின் மீண்டும் அதன் மேல் தடவி உலர வைத்து, பின்  முகத்தைக் கழுவ வேண்டும்.
 
2 டேபிள் ஸ்பூன் புதினா பேஸ்ட்டை, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து, அதோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து,  ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் இரண்டு முறை அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதன்  மூலமும் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்