பீட்ரூட் ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் முகப்பொலிவு கூடுமா...?

புதன், 5 ஜனவரி 2022 (12:31 IST)
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை ஜுஸ் செய்து வாரத்தில் இரண்டு முறை குடித்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜுஸ் ஐ குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கும். பீட்ரூட்டில் உள்ள நார்சத்து பெருங்குடல் ஐ சுத்தமாக்குவதற்கும், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் தீர்ந்துவிடும்.
 
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் காய்களில் முக்கியமானது பீட்ரூட். இதில் அயன் மற்றும் வைட்டமன் பி,12 ஆகிய சத்துக்கள் இருப்பதால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
 
பீட்ரூட் ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முகப்பொலிவு கூடும். அதே போன்று முகத்தை அழகு படுத்துவதிலும் பீட்ரூட் சிறந்த ஒன்றாக உள்ளது.
 
இதற்கு ஒரு தேக்கரண்டி பீட்ரூட் ஜுஸ் எடுத்து கொள்ளவும். அதன் உடன் ஒரு தேக்கரண்டிஅளவு எலுமிச்சை சாறு கலந்து வைத்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகம் பளிச்சென்று வெண்மையாக மாறிவிடும்.
 
பீட்ரூட் ஜுஸ் குடித்து வந்தால் மூளையில் ரத்த ஓட்டமானது அதிகரித்து டிமென்சா என்கிற முதுமை மறதி மற்றும் அல்சஸைமன் ஏற்படுவதை தடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்