சோற்றுக் கற்றாழையை பயன்படுத்தி தோல் சுருக்கம், கருமை நிறத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். சோற்றுக் கற்றாழையில் உள்ளிருக்கும் சதையில் இருந்து சாறு எடுத்து தோல் சுருக்கம் உள்ள இடத்தில் பூசுவதால் சுருக்கம், கருமை நிறம் மாறும். சோற்றுக் கற்றாழை முதுமையை போக்கும் உன்னதமான மருந்தாகிறது.
ஆவாரம் பூ பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும். தோலில் சுமார் 15 நிமிடங்களில் பூசி வைத்திருந்தால் தோல் சுருக்கம், கருமை நிறம் மாறி பழைய நிலைக்கு வரும். ஆவாரம் பூவை தேனீராக்கி குடிப்பதன் மூலம் தோல் ஆரோக்கியம் பெறும். ஆவாரம் பூ ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். வியர்வை நாற்றத்தை போக்கும்.
சிறிது அதிமதுர பொடியுடன், தக்காளி பசை சேர்த்து நன்றாக கலந்து பூசிவர தோல் சுருக்கம், கருமைநிறம் மாறும். தக்காளி வைட்டமின் சி சத்து கொண்டது. மருந்துவ குணங்களை கொண்ட இது புத்துணர்வு தரக்கூடியது. முதுமையை போக்கும் தன்மை கொண்டது. தோல் ஆரோக்கியம் பெறுகிறது.