மூலிகை மருத்துவத்தில் வாதயாராயணன் இலையின் மருத்துவ குணங்கள்

வாதயாராயணன் இலை பித்த நீர் பெருக்குதல்,  நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதம் அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாயுவைக் குறைக்கும். வீக்கம் கரைக்கும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும். 
வாதயாராயணன் இலையை எள் நெய்யில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் தீரும்.
 
சொறி சிரங்கு உள்ளவர்கள் இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி,  குளிர்ந்த நீரில் குளித்து வர நீங்கும்.
 
மேக நோயால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை நன்கு உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை 1 கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து அருந்தி வர குணமாகும்.
 
இரத்த சீதபேதிக்கு வாதநாராயணன் வேரை அரைத்து எருமைத் தயிருடன் கலந்து அருந்த குணம் தெரியும். இலையைப்  போட்டுக் கோதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.
 
நகச்சுத்தி, கடுமையான வலியுடன் நகக்கண்ணில் வீக்கம் வரும். இதற்கு பிற மருந்துகள் எதுவும் கேட்பதில்லை. இதன் தளிரை மைபோல் அரைத்து வெண்ணெயில் கலந்து வைத்துக் கட்ட இரு நாளில் குணமாகும். வலி உடனே நிற்கும்.
 
வாதயாராயணன் இலைச்சாறு 1 லிட்டர், மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை இவற்றின் சாறு  வகைக்குக் கால் லிட்டர் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெணெணெய வகைக்கு அரை லிட்டர், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், சீரகம், மஞ்சள் வகைக்கு 20 கிராம் பொடித்து அரைத்து அரை லிட்டர் பசும் பாலுடன் கலக்கிப் பதமாகக் காய்ச்சி 21 வெள்ளெருக்கம் பூ நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மேற்பூசாகத் தடவிப் பிடித்து விடப் பக்க வாதம், பாரிச வாயு, நரம்பு இழப்பு முக இசிவு, முகவாதம், கண், வாய், நாக்கு, உதடு, இழப்பு ஆகியவை தீரும்.
 
வாதயாராயணன் இலையின் சூரணத்தை 500 கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடிநீராககுடிக்க வாய்வுத் தொல்லை, வயிற்று வலி குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்