கைவசம் வசம்பு இருந்தால் போதும்; இயற்கை முறையில் நோய்களுக்கு தீர்வு பெற...!

வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; பசியுண்டாக்கும்; வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும்.

 
வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க  வேண்டியது அவசியம். 
 
வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும்  நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
 
வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க  வெளியே வந்து விடும்.
 
வசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் பூச, நன்றாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்; குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி கட்டுப்படும்.
 
பாட்டி வைத்தியத்தில் இடம் பெறுவதும் இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை  சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன  தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
 
சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம். வசம்பை அதிக அளவில் நீண்ட காலத்திற்கு உட்கொண்டால் கடுமையான வாந்தியையும், வயிற்றுக்குமட்டலையும் தூண்டும்.
 
வசம்புடன் மஞ்சளை வைத்து சிறிது நீர் தெளித்து மையாக அரைத்து தேள், பூரான், வண்டுக்கடிவாயில் பூசிவர விஷம் முறியும்.  கடுப்ப முற்றிலும் நீங்கும்.
 
தேங்காய் எண்ணெயில் வசம்பை பொடித்திட்டு, குப்பைமேனி சாறை சேர்த்து காய்ச்சி எண்ணெயை வடிகட்டி எடுத்து வைக்கவும். இந்த எண்ணெயை சிரங்கின் மீது தடவிவர சிரங்கு விரைவில் குணமாகும்.
 
வசம்புடன் பூண்டு வைத்து அரைத்து வெல்லத்துடன் சேர்த்துத் தின்றால் குடலில் உள்ள தீமை தரும் பூச்சிகள் மலத்துடன்  வெளிப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்