கடல் உப்பு குடலை சுத்தம் செய்வதிலும், மலம் கழித்தலை சுலபமாக்கும். நச்சுக்கள், பாக்டீரியா மற்றும் பாரசைட்ஸ் போன்ற கிருமிகளை அழித்து குடலை சுத்தமாக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து சிறுதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடித்து வயிற்றை லேசாக கீழ்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். குடல் சுத்தமாக ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.
கீரை, முளைகட்டிய பருப்பு வகைகள், ஆலிவ்ஸ், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ், செலரி, கடல் காய்கறிகள், கொலரார்ட் கீரைகள், லீக்ஸ், பட்டாணி, மற்றும் சுவிஸ் சார்ட் போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்து வரும் போது உங்க குடல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.