துரியன் பழத்தினுள் உள்ள ஆரோக்கிய நன்மைகள் !!

துரியன் பழத்தின் சதைப் பகுதியை சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தலாம். நகங்களில் பிரச்சனை இருக்கும் போது, துரியன் பழத்தின் வேர்களைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அதனைச் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். துரியன் மரத்தின் வேர் மற்றும் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால், காய்ச்சலில் இருந்து குணம் பெறலாம்.
 
துரியன் பழத்தில் உள்ள வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக  இருக்கும்.
 
துரியன் பழத்தின் தோல், கொசுக்கடியைத் தடுக்க உதவும். துரியன் பழத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால், இதனைச் சாப்பிட இரத்த  சோகையை குணமாகும்.
 
துரியன் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தலாம். பொதுவாக கருப்பை பலவீனமாக இருந்தால்  கருத்தரிக்க முடியாது. இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், கருப்பை பலமாகி, ஆரோக்கியமாக ஒரு அழகான  குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்