நெல்லிக்காய் சாற்றுடன், பாகற்காய் சாறு சேர்த்து அருந்தி வந்தால், கணையத்தைத் தூண்டி கணையநீரைச் சுரக்கச் செய்து சர்க்கரை அளவைப் பராமரிக்கும். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது.
கர்ப்பிணிகள் கொரொனாவிலிருந்ழ காத்துக் கொள்ள நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். கால்சியம், புரதம் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்திருப்பதால் நெல்லிக்காயைக் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.