பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில், உடலில் நச்சுகள் சேராமல் தடுப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்சினைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது. இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.