பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்கும் வில்வம்

வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். கனி தொடர்பான, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து  இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள்.
வேர் நோய் நீக்கி உடல் தோற்றம், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தோற்றம். பழ ஓடு  காய்ச்சல் போக்கும்.
 
வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும்.  தொத்து வியாதிகளை நீக்கும்.
 
வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல்  வெப்பத்தைத் தணிக்கும். ஜன்னி ஜுரங்களைப் போக்கும். இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.
 
பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு  பண்ணும். பட்டை, வாத காய்ச்சலை தணிக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிர்க்கும்.
 
பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை, கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது,  கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.
 
வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் குணமாக்கும் ஆற்றல் உடையது
 
வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும்  குணமாக்கும் வில்வப் பழம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்